துரை இரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : துரை இரா |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 07-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 2 |
தமிழன்
# இயற்கையின் துயரம்#
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அழகு
அருகில் சென்றால்?
நான் உன்னை நம்பி இருந்தேன்
நீ என்னை நம்பி இருந்தாய்
இறுதியில் வீழ்வது நீ?-
நஞ்சை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் தினமும்
வாழ்வேனோ?இல்லை வீழ்வதற்காக.
என்னை படைத்தது எவனோ?
ஆதியில் சுமப்பதும் -நீ
அந்தமாக அணைப்பதும்-நீ
அணையாக நின்றாய்-நீ
வினையாக வந்தேன்-நான்
மும்மாரியாய் இருந்த-உன்னை
தடமாறி அனுப்பி விட்டேன் -நான்
இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்
வா! காத்து இருக்கிறேன்
காக்க மறந்தேன் உன்னை -நான்
வா!வா!வழியோடு விழி வைத்து
காத்திருக்கிறேன் என்னை நீ அனைக்க ,வா?
இவ்வளவும் ஒரு பெண்ணை நினைத்து அல்ல உன்னை நினைத்து எந்தன் வாழ்க்கையே!!!
நீதானடி நான் கண்ட பாதை
இதுவரை காணாத கவிதை ....!!!!
என் வாழ்வெனும் நாடகத்தில்
நுழைந்தாய் புது பாத்திரமாய்
என் உயிரில் உன்னை
ஊற்றினேன் பத்திரமாய்
உனை பார்த்து ரசிப்பேன் சித்திரமாய் .....!!!
பூவை தேடிதானே தென்றல் வரும்
உனைதேடி தென்றல் வந்ததேன்
சக்கரை தேடிதானே எறும்பு போகும்
உன்னை தேடி எறும்பு வந்ததேன் ...
பழத்தை தேடும் கிளிகள்
உன்னை தேடுவதேனடி .
நீ பழ ஜாதி யினாலா இல்லை
கிளி ஜாதி யினாலா ......
கிளி பேசும் என்று தெரியும்
வெட்கப்படும் என்று கண்டுகொண்டேன் இன்று ....
பூவிதழ் கசக்கும் என்று நினைத்தேன் ..
இனிக்கும் என்று ஈக்கள் உனை மொய்த்த போது அறிந்தேன் .....!!!
அன்று இரவாமல் வாழ்ந்தான் என் தமிழன்
இன்று இரந்தே வாழ்கிறான் என் தமிழன்
அன்று வந்தவர் எல்லாம் கற்றார் என் தமிழை
இன்று இங்கு வாழ்பவன் கற்க மறுக்கிறான் என் தமிழை
அன்று துறந்து வாழ்ந்தான் என் தமிழன்
இன்று துறவை மறந்து வாழ்கிறான் என் தமிழன்
அன்று கல்வியை போற்றி வாழ்ந்தான் என் தமிழன்
இன்று கல்வியை வாணிபம் செய்கிறான் என் தமிழன்
அன்று கொடை வள்ளல் என் தமிழன்
இன்று கொடை வாங்கும் வள்ளல் என் தமிழன்
அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் என் தமிழன்
இன்று அங்கத்திற்க்காக தமிழ் வளர்க்கிறான் என் தமிழன்
அன்று உறவாய் வாழ்ந்தான் என் தமிழன்
இன்று உறவை பிரிக்கிறான் என் தமிழன்
அன்று பல புலவன் எழுதினான்
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
கோபத்தை கட்டுபடுத்துபவர்கள் ஆண்களா?.இல்லை பெண்களா?
கோப படாமல் எழுதுங்கள்.